விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு?? எப்போது தொடங்கும்?? வெளியான முக்கிய தகவல்!!
இந்தியாவில் வாழும் குடிமக்களின் விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் அரசு சேகரித்து வருகிறது. கடைசியாக 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான தயாரிப்புகளை ஒன்றிய அரசு தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதே நேரம் இதில் சாதி விவரங்களை கேட்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. கொரோனா காரணமாக 2020இல் நடத்தியிருக்க வேண்டிய கணக்கெடுப்பை அரசு ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.



























