நாடகம் நடத்துகிறார் திருமாவளவன்.. தமிழிசை சௌந்தரராஜன் ஓபன் டாக்!!

0
நாடகம் நடத்துகிறார் திருமாவளவன்.. தமிழிசை சௌந்தரராஜன் ஓபன் டாக்!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (செப்டம்பர் 16) தமிழக முதல்வர் ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்தார். ஆட்சியில் பங்கு குறித்து பேசிய திருமாவின் பேச்சு சர்ச்சையான நிலையில், இச்சந்திப்பு நிகழ்ந்தது. இந்த நிலையில் திருமாவளவன் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தமிழிசை சௌந்தர்ராஜன் முக்கிய கருத்தை கூறியுள்ளார்.

அதில், தமிழகத்தில் மதுவிலக்கு மாநாடு நடத்தப்போகிறேன். இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டாலும் கவலை இல்லை என்று தீரமுடன் புறப்பட்ட திருமாவளவன் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததும் தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

முன்னாள் முதல்வர் ராஜினாமா.. விரைவில் புதிய முதலமைச்சர்?? விவரம் உள்ளே!!

தேசிய கல்வி கொள்கையை ஏற்காதவர்கள் தேசிய மதுவிலக்கு கொள்கையை மட்டும் ஏற்பீர்களா? அரசே வருமானம் என்ற பெயரில் மதுக்கடைகளை நடத்துகிறது.முதலில் தி.மு.க.வினர் மது ஆலைகளை மூடிவிட்டு மதுவுக்கு எதிராக போராட வேண்டும். அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு நடத்தும் ‘மது ஒழிப்பு மாநாடு’ என்ற நாடகம் மக்கள் மத்தியில் எடுபடாது என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!