அரசு போக்குவரத்து ஊழியர்கள் மார்ச் 24 முதல் வேலைநிறுத்தம்? – சிக்கலில் மாநில அரசு!

0
அரசு போக்குவரத்து ஊழியர்கள் மார்ச் 24 முதல் வேலைநிறுத்தம்? - சிக்கலில் மாநில அரசு!
அரசு போக்குவரத்து ஊழியர்கள் மார்ச் 24 முதல் வேலைநிறுத்தம்? - சிக்கலில் மாநில அரசு!
அரசு போக்குவரத்து ஊழியர்கள் மார்ச் 24 முதல் வேலைநிறுத்தம்? – சிக்கலில் மாநில அரசு!

கர்நாடகா மாநிலத்தில் போக்குவரத்து ஊழியர்கள் பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற மார்ச் 24 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளனர்.

வேலை நிறுத்தம் அறிவிப்பு

கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அரசு போக்குவரத்துத் துறை ஊழியர்கள் ஊதிய உயர்வு, கூடுதல் கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 15 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினார்கள். இதனால் அரசுக்கு மில்லியன் கணக்கில் பண இழப்பு ஏற்பட்டது. மேலும் அந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் 4000க்கு மேற்பட்டவர்களை அதிகாரிகள் பணிநீக்கம் செய்தனர்,

தமிழக அரசு கேபிள் டிவி கட்டணம் உயர்வு – அதிர்ச்சியில் சாமானியர்கள்.. அமைச்சர் விளக்கம்!

இந்நிலையில் தற்போது KSRTC, BMTC, NWKRTC மற்றும் KKRTC ஆகிய நான்கு பதிவு செய்யப்பட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, ஊதிய உயர்வு, உதவித்தொகை உயர்வு, மருத்துவ வசதிகள், ஏப்ரல் 2021 வேலைநிறுத்தத்திற்குப் பிறகு பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்துதல், ஷிப்ட் முறையை அமல்படுத்துதல், ஒப்பந்த ஆட்சேர்ப்பை நிறுத்துதல் மற்றும் காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 24 ஆம் தேதி போராட்டம் நடத்த இருப்பதாக மாநில தொழிலாளர் ஆணையரிடம் அறிவிப்பை வழங்கினார்கள்.

Follow our Instagram for more Latest Updates

மேலும் அதில் எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை மார்ச் 24 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தால் தற்போது நடைபெற்று வரும் II PU (ப்ரீ-யுனிவர்சிட்டி) தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படும். மேலும் அரசுக்கு மில்லியன் கணக்கில் ரூபாய் இழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!