“6 வங்கிகளில் வீட்டு கடன் வட்டி விகிதம் குறைப்பு”…!! ரிசர்வ் வங்கியின் அருமையான அறிவிப்பு…!! எந்த வங்கின்னு படிச்சு தெரிஞ்சுக்கோங்க…

0
"6 ?????????? ?????? ???? ????? ??????? ????????"...!! ??????? ????????? ???????? ?????????...!! ???? ????????? ??????? ???????????????...
"6 வங்கிகளில் வீட்டு கடன் வட்டி விகிதம் குறைப்பு"...!! ரிசர்வ் வங்கியின் அருமையான அறிவிப்பு...!! எந்த வங்கின்னு படிச்சு தெரிஞ்சுக்கோங்க...

“6 வங்கிகளில் வீட்டு கடன் வட்டி விகிதம் குறைப்பு”…!! ரிசர்வ் வங்கியின் அருமையான அறிவிப்பு…!! எந்த வங்கின்னு படிச்சு தெரிஞ்சுக்கோங்க…

கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் (RBI) நிதி கொள்கை குழு கூட்டத்தில் அனைத்து வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.25% ஆக குறைக்கப்பட்டது. இதன் அடிப்படையில், முதற்கட்டமாக இந்தியாவின் 6 முக்கியமான வங்கிகளில் வீட்டு கடன் மீதான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கீழே விரிவாக பார்ப்போம்.

கனரா வங்கி:

இவ்வங்கியானது ரெப்போ லிங்கிடு லெண்டிங் ரேட்  (RLLR) யை 9.25% லிருந்து 9% ஆக குறைத்துள்ளது. இந்த சலுகை  கடந்த பிப்ரவரி 12, 2025 அன்று அல்லது அதற்கு பின் கணக்கு தொடங்கியவர்களுக்கு பொருந்தும்.

பேங்க் ஆப் பரோடா:

இவ்வங்கியானது வீட்டு கடன் மீதான வட்டி விகிதத்தை அதாவது, RLLR யை 8.90% ஆக குறைத்துள்ளது. மேலும், இது கடந்த பிப்ரவரி 10, 2025 முதல் அமலுக்கு வந்தது.

பேங்க் ஆப் இந்தியா:

இந்த வங்கி தனது RLLR வட்டி விகிதத்தை 9.35% லிருந்து 9.10% ஆக குறைத்துள்ளது. மேலும், இது கடந்த பிப்ரவரி 7, 2025 முதல் அமலுக்கு வந்தது.

பிரதமர் மோடியை சந்திக்கவுள்ள  எலான் மஸ்க்..!!  இந்திய சந்தையில் ஏற்படவிருக்கும்  மாற்றங்கள் என்னென்ன..?

யூனியன் பாங்க் ஆப் இந்தியா:

இவ்வங்கியானது கடந்த பிப்ரவரி 11, 2025 அன்று முதல் தனது RLLR வட்டி விகிதத்தை 9.25% லிருந்து 9.0% ஆக குறைத்துள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி:

இந்த வங்கி தனது RLLR வட்டி விகிதத்தை  25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 9.35% லிருந்து 9.10% ஆக குறைத்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி:

இவ்வங்கியானது கடந்த பிப்ரவரி 10, 2025 அன்று முதல் தனது RLLR வட்டி விகிதத்தை 9.25% லிருந்து 9.0% ஆக குறைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!