CSIR ஆணையத்தில் ரூ.81,100/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!

0
CSIR ?????????? ??.81,100/- ?????????? ???? - ???? ???????????? || ???? ????????????????!
CSIR ஆணையத்தில் ரூ.81,100/- ஊதியத்தில் வேலை - முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!

CSIR ஆணையத்தில் ரூ.81,100/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!

 

CSIR-மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் (CDRI) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Stenographer, Junior Secretariat Assistant பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

CSIR காலிப்பணியிடங்கள்:

Junior Stenographer, Junior Secretariat Assistant பணிக்கென காலியாக உள்ள 11 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Stenographer – 4 பணியிடங்கள்

Junior Secretariat Assistant – 7 பணியிடங்கள்

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CSIR வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Junior Stenographer – அதிகபட்ச வயதானது 27 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

NFL தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் Deputy General Manager வேலை – சம்பளம்: ரூ.2,60,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

Junior Secretariat Assistant – அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Stenographer – ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை

Junior Secretariat Assistant – ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை

CSIR தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் / Proficiency Typing Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.03.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

 

 Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!