இனி ரயில் டிக்கெட்டுக்கு இதுதான் ரூல்ஸ்…!! இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய அப்டேட்…!!
இந்தியாவில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக ரயில் சேவை உள்ளது. இதற்கு, அனைத்து மாநிலங்களையும் இணைக்கும் வகையில் இந்தியாவில் ரயில் சேவை அமைந்துள்ளதே காரணம். மேலும், தற்போது ரயில்களில் அதிக பயணிகள் பயணிப்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்க இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மாபெரும் காசி கும்பமேளா நிகழ்ச்சியின் காரணமாக ரயில்நிலையங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 18 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து இந்திய ரயில்வே புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.
TNPSC Group II, IIA & IV General Tamil Quiz with Answer || Unit I Section 2 Part A – PDF Download…!!
அதாவது, பொதுவாக பயணிகள் ரயிலில் பயணிக்க ‘பொது டிக்கெட்’ வாங்கினால் எந்த ரயிலிலும் பயணம் மேற்கொள்ளலாம். ஆனால், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிகளில் பொது டிக்கெட்களில் பயணிக்கக்கூடிய ரயிலின் பெயர் குறிப்பிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஒரு குறிப்பிட்ட ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் விபத்துக்களை கட்டுப்படுத்த முடியும். மேலும், இந்த விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய ரயில்வே இன்னும் வெளியிடவில்லை.
























