பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஐசிசியின் இறுதி எச்சரிக்கை.. என் தெரியுமா..?

0
?????????? ?????????? ????????????? ????????? ????? ??????????.. ??? ????????..?
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஐசிசியின் இறுதி எச்சரிக்கை.. என் தெரியுமா..?

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஐசிசியின் இறுதி எச்சரிக்கை.. என் தெரியுமா..?

சாம்பியன்ஸ் டிராபி 2025 யை பாகிஸ்தானில் நடத்த ஐசிசி நிர்வாகம் முடிவு செய்தது. இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தெரிவித்தது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) முழுப் போட்டியையும் பாகிஸ்தானில் நடத்துவதில் பிடிவாதமாக உள்ளது. மேலும், ஐசிசி மற்றும் பிசிசிஐயால்  முன்மொழியப்பட்ட “ஹைப்ரிட் மாடல்” போட்டி முறையை நிராகரித்தது மட்டுமின்றி போட்டி குறித்து எந்தவித பதிலும் அளிக்கவில்லை.

எனவே ஐ.சி.சி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி குறித்து  இன்றைக்குள் (30-11-2024) இறுதி முடிவு எடுக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஐ.சி.சி அவகாசம் அளித்துள்ளது. மேலும் பாகிஸ்தானில் நடைபெறும் போட்டியில் இந்தியா பங்கேற்காது என திட்டவட்டமாக தெரிவித்ததால் இந்தியா – பாகிஸ்தான் இடையான போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற ஐ.சி.சி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!