ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அடித்த  ஜாக்பாட்.. தொழில்முனைவோருக்கு நிதி உதவி வழங்கும் அரசாங்கம்..

1
???????? ??? ??????????????? ??????  ????????.. ?????????????????? ???? ???? ???????? ?????????..
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அடித்த  ஜாக்பாட்.. தொழில்முனைவோருக்கு நிதி உதவி வழங்கும் அரசாங்கம்..

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அடித்த  ஜாக்பாட்.. தொழில்முனைவோருக்கு நிதி உதவி வழங்கும் அரசாங்கம்..

ஒரு நிறுவனத்தின் ஆரம்ப புள்ளி மூலதனமாகும். அந்த மூலதன பற்றாக்குறையால் பல தகுதியான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மூடப்படுகிறது. மேலும் சொத்துக்கள் இருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே வங்கிகள் கடன் வழங்குகின்றன. இந்நிலையில் ஆரம்ப கட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கி, புதுமையான யோசனைகளை வளர்க்க ஸ்டார்ட்அப் இந்தியா விதை நிதி திட்டம் (Startup India Seed Fund Scheme)  உதவி வருகிறது. இந்த திட்டமானது வளரும் தொழில் முனைவோருக்கு வாய்ப்புகளை வழங்குவதற்கும் நாட்டில் வலுவான ஸ்டார்ட் அப் சூழலை உருவாக்கும் நோக்கத்தை கொண்டு இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது.

Today Vegetable Price: தொடர் கனமழையால் காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்வு..!! ” தக்காளி முதல் இஞ்சி வரை பட்டியல் உள்ளே”..!!

மேலும் மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை இந்த ஸ்டார்ட் அப் இந்தியா விதை நிதித் திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் உள்ள தகுதியான நபர்கள்  ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க உதவி அளிக்கிறது. இந்த திட்டமானது சமூக தாக்கம், கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை, நிதி உள்ளடக்கம், கல்வி, விவசாயம், உணவு, உயிரிய தொழில்நுட்பம், சுகாதாரம், பாதுகாப்பு, விண்வெளி, ரயில்வே, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற துறைகளில் புதுமையான தீர்வுகளை உருவாக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது.

மேலும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம், மத்திய அல்லது மாநில அரசின் வேறு எந்தத் திட்டத்தின் வாயிலாக 10 லட்ச ரூபாய்க்கு மேல் பண உதவியைப் பெற்றிருக்கக் கூடாது. நிறுவனங்கள் சட்ட ஒழுங்குமுறைகள் 2018 ன் படி, திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் நிறுவன பங்கு குறைந்தது 51% ஆக இருக்க வேண்டும். இந்த தகுதிகள் இருக்கும் பட்சத்தில் ஆண்டுக்கு 5% வட்டி வீதத்தில் ரூ.30 லட்சம் வரை இந்த திட்டத்தில் கடன் பெற்றுக்கொள்ளலாம் என்று பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) தெரிவித்துள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!