
PAN கார்டில் பெயர் திருத்தம் செய்வது எப்படி?.. இதோ உங்களுக்காக வீட்டில் இருந்து செய்யும் சுலபமான வழிமுறைகள்..
இந்நிலையில் பான் கார்டு திருத்தம் செய்ய ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டு வழிமுறைகள் உள்ளன. உங்கள் பான் கார்டில் பெயரை மாற்ற அல்லது திருத்த நீங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை கீழே விரிவாக காணலாம்.
ஆன்லைன் மூலம் பான் கார்டில் உங்கள் பெயரை திருத்தம் செய்வதற்கான வழிமுறைகள்:
* https://www.onlineservices.
* “Apply Online” என்ற அப்ஷனை கிளிக் செய்து, விண்ணப்ப வகையின் கீழ், “Changes or correction in existing PAN Data/ Reprint of PAN Card (No changes in existing PAN data).” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் பெயர் மாற்றம் விண்ணப்ப வகையின் கீழ், “Individual” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
* குடும்பப்பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல், பான் எண் போன்ற விவரங்களை உள்ளிடவும்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஐசிசியின் இறுதி எச்சரிக்கை.. என் தெரியுமா..?
* தேவையான அனைத்து விவரங்களையும் வழங்கிய பிறகு, “By submitting data to us and/or using our NSDL e-Gov TIN website.” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
* காட்டப்பட்டுள்ளபடி கேப்ட்சாவில் மதிப்புகள் அல்லது எண்களை உள்ளிடவும், பின்னர் “Submit” என்பதைக் கிளிக் செய்யவும்.
* படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, நீங்கள் வழங்கிய மின்னஞ்சல் முகவரிக்கு டோக்கன் எண்ணுடன் உங்கள் பெயர் மாற்றத்திற்கான கோரிக்கையை உறுதிப்படுத்தப்பட்ட செய்தி வரும். பின்னர் பெயர் மாற்றத்திற்கான கட்டணத்தை செலுத்தியவுடன் சில தினங்களுக்குள் பெயர் மாற்றம் செய்யப்படும்.
ஆப்லைன் மூலம் பான் கார்டில் உங்கள் பெயரை திருத்தம் செய்வதற்கான வழிமுறைகள்:
* பெயர் மாற்றும் செய்ய வேண்டிய பான் டேட்டா படிவத்தை பதிவிறக்கம் செய்யவும். படிவத்தில் உள்ள அனைத்து கட்டாய விவரங்களையும் நிரப்பவும்.
* அடையாளச் சான்று, முகவரிச் சான்று மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களை இணைக்கவும்.
* அருகிலுள்ள NSDL சேகரிப்பு மையத்தில் படிவத்தை சமர்ப்பிக்கவும்.
* பான் கார்டு புதுப்பித்தல் அல்லது திருத்தம் செய்வதற்கான கட்டணத்தை செலுத்தவும், உங்கள் பான் கார்டு விண்ணப்பத்தின் நிலையை கண்காணிக்க 15 இலக்க ஒப்புகை எண் தரப்படும். இதன் மூலம் பெயர் மாற்றத்திற்கான கோரிக்கையை உறுதிப்படுத்தப்பட்டு விரைவில் பெயர் மாற்றம் செய்யப்படும்.

























