புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க அரசு அனுமதி…!! விண்ணப்பிக்கும் கடைசி நாள் என்னவென்று தெரியுமா..?

0
புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க அரசு அனுமதி...!! விண்ணப்பிக்கும் கடைசி நாள் என்னவென்று தெரியுமா..?
புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க அரசு அனுமதி...!! விண்ணப்பிக்கும் கடைசி நாள் என்னவென்று தெரியுமா..?

புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க அரசு அனுமதி…!! விண்ணப்பிக்கும் கடைசி நாள் என்னவென்று தெரியுமா..?

 

தமிழகம் முழுவதும் சாமானிய மக்களின் போக்குவரத்தை எளிமைப்படுத்த மலிவு விலையில் அரசு ஆயிரக்கணக்கான பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்த சேவையை பயன்படுத்தி லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களது அன்றாட பயணத்தை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் சிறிய தூரம் வரையிலான பயணம் மேற்கொள்ளும் பயனாளர்களுக்கு மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் மினி பேருந்துகளும்  இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில்   மினி பேருந்துகளை புதிய வழித்தடங்களில் இயக்குவது பற்றி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பெண்கள் சுய தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் வரை நிதி உதவி…மத்திய அரசின் சூப்பர் திட்டம் இதோ

அதாவது, அரசு போக்குவரத்து துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக 50 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், முன்னதாக மினி பேருந்துகள் இயக்க அனுமதி பெற்று தினசரி பேருந்துகளை இயக்கிக் கொண்டிருக்கும் உரிமையாளர்கள் புதிய திட்டத்தின் படி தங்களது வழித்தடத்தை நீட்டிப்பு செய்வதற்கான அனுமதியும் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் புதிய அனுமதி சீட்டுபெற விரும்புவோர் விண்ணப்ப படிவத்தை https://ramanathapuram.nic.in/department/regional-transport-office/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து ராமநாதபுரத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மார்ச் 11-ம் தேதிக்குள் நேரில் சென்று விண்ணப்பிக்ககூறி மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!