பெண்கள் சுய தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் வரை நிதி உதவி…மத்திய அரசின் சூப்பர் திட்டம் இதோ
பெண்கள் சுய தொழில் தொடங்கி பொருளாதாரத்தில் முன்னேற்றமடைய வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அவ்வாறு ஒரு சிறந்த திட்டமான,”பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY)” திட்டம் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். அதாவது, பெண் தொழில் முனைவோர்கள், சுய தொழில் செய்பவர்கள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்களுக்கு இத்திட்டத்தில் ரூ. 10 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. மேலும், இத்திட்டம் மூன்று வகையான கடன் உதவிகளை உள்ளடக்கியுள்ளது.
அதன்படி, முதலில் ‘ஷிஷு’ வகையில் தொடக்க நிலை தொழிலுக்கு ரூ. 50,000 வரை கடன் தொகை வழங்கப்படுகிறது. அடுத்ததாக, ‘கிஷோர்’ வகையில் வளர்ந்து வரும் தொழில்களுக்கு கடன் தொகையாக ரூ. 50,000 முதல் ரூ. 5 லட்சம் வரை தரப்படுகிறது. மூன்றாவதாக, ‘தருண்’ வகையில் நன்கு நிறுவப்பட்ட வணிகங்களுக்கு ரூ. 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை கடன் தொகை வழங்கப்படுகிறது. மேலும், இத்திட்டத்திற்கான வட்டி விகிதம் 8% முதல் 12 % வரை ஆகும். மேலும், இது வழங்கப்படும் கடன் தொகையை பொறுத்து மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.


























