அட்சய திருதியை முன்னிட்டு வெளியான குட் நியூஸ்.. தங்கம் வாங்க இது தான் சரியான தருணம்..!!
இந்தியாவில் சமீப காலமாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி, தங்கத்தின் விலையானது வரலாறு காணாத புதிய உச்சம் தொட்டு அன்றைய தினம் ஒரு சவரன் ரூ.74,320-க்கு விற்பனை செய்யப்பட்டு நகை பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்தது. மேலும், தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதும் சாமானிய மக்கள் இந்த விலையேற்றத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரியார் பல்கலைக்கழகத்தில் Guest Faculty வேலைவாய்ப்பு 2025 – நேர்காணல் மட்டுமே || இறுதி வாய்ப்பு!
இந்நிலையில் “நேற்று (29-04-2025) தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,980-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, அட்சய திருதியை நாளான இன்று (30-04-2025) தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி விலையானது தொடர்ந்து 10 நாட்களாக ஒரு கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது” என்பது குறிப்பிடத்தக்கது.


























