
மக்களுக்கு ஓர் நற்செய்தி.. இனி கேஸ் சிலிண்டர் தேவையில்லை.. மத்திய அரசு அமல்படுத்தவுள்ள புதிய திட்டம்..!!
சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. மேலும், சுற்றுச் சூழலை பாதுகாக்கவும் மற்றும் இறக்குமதி செலவை குறைக்கவும், இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு, தற்போது மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
ரூ.50,000/- சம்பளத்தில் இந்திய மசாலா வாரியத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!
இத்திட்டம், சென்னை, திருவள்ளூர், நாகை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் முதலில் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதற்காக 466 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட இருக்கும் நிலையில், அதில், 260 கிலோ மீட்டர் தூரம் கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணைய பகுதிகளில் இடம் பெற்றுள்ளதால் அதற்கு தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையமும் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

























