மத்திய அரசு ரூ. 8 லட்சம் கோடி கடன் வாங்க திட்டம்…!! 2025 -2026 ஆம் நிதியாண்டின் மொத்த சந்தை கடன் தொகையில் இது 54% என தகவல்

0
மத்திய அரசு ரூ. 8 லட்சம் கோடி கடன் வாங்க திட்டம்...!! 2025 -2026 ஆம் நிதியாண்டின் மொத்த சந்தை கடன் தொகையில் இது 54% என தகவல்
மத்திய அரசு ரூ. 8 லட்சம் கோடி கடன் வாங்க திட்டம்...!! 2025 -2026 ஆம் நிதியாண்டின் மொத்த சந்தை கடன் தொகையில் இது 54% என தகவல்

மத்திய அரசு ரூ. 8 லட்சம் கோடி கடன் வாங்க திட்டம்…!! 2025 -2026 ஆம் நிதியாண்டின் மொத்த சந்தை கடன் தொகையில் இது 54% என தகவல்

2025 -2026 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டானது 34.96 லட்சம் கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து, மாநிலங்களின் மின்சார விநியோக சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், மாநிலங்களுக்கு இடையேயான மின்சார பகிர்வை அதிகரிக்கவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து 0.5% கூடுதல் கடன் வாங்கப்படும் என்றும் அறிவித்தார்.

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. நாளை (29-03-2025) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளின் விவரம்.. வெளியான திடீர் அறிவிப்பு..

அந்தவகையில், தற்போது மத்திய அரசு 2025 -2026 ஆம் நிதியாண்டின் முதல் பாதியை சமாளிக்க, ரூ. 8 லட்சம் கோடி கடன் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது 2025 -2026 ஆம் நிதியாண்டின் மொத்த சந்தை கடன் தொகையான ரூ. 14.82 லட்சம் கோடியில் 54% ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கடன் பத்திரங்கள் மூலம் 10,000 கோடி நிதி திரட்டவும் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கடன் தொகையானது, 2024 -2025 ஆம் நிதியாண்டின் மொத்த சந்தை கடன் தொகையான ரூ. 14.01 லட்சம் கோடியை விட அதிகம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!