உஷாரு மக்களே..!! கசிந்து வரும் ஆதார் ,பான் கார்டின் தனிப்பட்ட விவரங்கள் .!! நடவடிக்கை எடுக்கும் மத்திய அரசு..!!
இந்தியாவில் அடையாள ஆவணமாக இருந்து வரும் ஆதார் மற்றும் பான் கார்டுகள், வங்கி பரிவர்த்தனை முதல் அரசாங்கம் வழங்கும் நலத்திட்டங்களை பெறுவது வரை மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அத்தகைய ஆதார் மற்றும் பான் கார்டு ஆவணங்களில் இருக்கும் ஒரு மனிதனின் தனிப்பட்ட விவரங்களை சில குறிப்பிட்ட இணையதள பக்கங்கள் வெளியிட்டு வருவதால் மத்திய அரசு அத்தகைய சமூக வலைத்தளங்களை முடக்கி அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும், மக்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதில் மக்களும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் , ஆதார் மற்றும் பான் கார்டில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாடு – ஒரே தேர்தல்.. 3 சட்டங்களை கொண்டு வர மத்திய அரசு திட்டம்!!



























