இந்தியாவில் ஒரே நாடு – ஒரே தேர்தல்.. 3 சட்டங்களை கொண்டு வர மத்திய அரசு திட்டம்!!
இந்தியாவில் தற்போது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனால் அதிக தொகையை மத்திய மற்றும் மாநில அரசுகள் செலவிட நேரிடுகிறது. இதனை கருத்தில் கொண்டு செலவு மற்றும் நிர்வாக பணிகளை குறைக்கும் நோக்கில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்..!! தெற்கு ரயில்வே துறை அறிவிப்பு..!!
அதன்படி, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மத்திய அரசு 18 சட்டத் திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து புதிய தேர்தல் திட்டம் தொடர்பான மூன்று மசோதாக்களை, வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும் பொழுது இந்தியாவில் ஒரே நாடு – ஒரே தேர்தல் முறை விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


























