திருப்பதி லட்டு விவகாரம்.. முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!!

0
திருப்பதி லட்டு விவகாரம்.. முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!!

திருப்பதி லட்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் இன்று (செப்டம்பர் 30) விசாரித்தது. அதில், திருப்பதி லட்டு தயாரிப்புக்கான நெய்யில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் பேசியது ஏன்? சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள ஆந்திர முதல்வர், முடிவு வருவதற்கு முன்பே பொதுவெளியில் பேசியது ஏன்? சர்ச்சைக்குரிய நெய் தான் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? என கேள்வி எழுப்பியது.

உஷாரு மக்களே..!! கசிந்து வரும் ஆதார் ,பான் கார்டின் தனிப்பட்ட விவரங்கள் .!! நடவடிக்கை எடுக்கும் மத்திய அரசு..!!

மேலும் பொது வெளியில் பேசுவதற்கு முன்பு என்ன கலப்படம் என்பது உறுதி செய்திருக்க வேண்டும். அரசியல் அமைப்பு மதிக்கும் பதவியில் உள்ள முதலமைச்சர் கடவுளை வைத்து அரசியல் செய்யக்கூடாது. மத உணர்வுகளை மதிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளது. மத்திய அரசின் கருத்தை அறிய விசாரணையை வரும் அக்டோபர் 3ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!