“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தனம் கதாபாத்திரம் மாற்றம் – ரசிகர்கள் ஷாக்!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் தனம் கதாபாத்திரம் மாற்றம் - ரசிகர்கள் ஷாக்!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தனம் கதாபாத்திரம் மாற்றம் – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதைக்கு முக்கிய ஆணி வேராக இருக்கும் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுஜிதா தற்போது விலகி இருப்பதாகவும், அவருக்கு பதிலாக வேறு நடிகை களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகை சுஜிதா:

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் குடும்பக்கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் பல குடும்பங்கள் இந்த சீரியலை விரும்பி பார்க்கின்றனர். இந்நிலையில் TRPயில் போட்டி போடும் இந்த சீரியலில் பல முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கின்றனர். அதில் பல பிரபலங்கள் தங்களுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கதைக்கு ஆணிவேராக தனம் கதாபாத்திரம் இருக்கிறது. தனமாக நடிகை சுஜிதா நடித்து வருகிறார்.

முடிவுக்கு வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்? விரைவில் சீசன் 2 தொடக்கம்! ரசிகர்கள் ஷாக்!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அந்த அளவிற்கு பெயர் கொடுத்த நிலையில் தற்போது அந்த சீரியலில் இருந்து அவர் விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். ஆனால் அது குறித்த முழு விவரம் எதுவும் வெளியாகவில்லை. மேலும் அவருக்கு பதிலாக யார் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்ற குழப்பமும் எழுந்துள்ளது.

மேலும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுசித்ரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அப்போ பாக்யலட்சுமியில் அவர் நடிக்கமாட்டாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். ஆனால் அது குறித்த முழு விவரம் எல்லாம் சரியாக தெரியவில்லை. தனம் கதாபாத்திரத்தில் சுஜிதா தான் பொருத்தமாக இருக்கிறார். இருந்தாலும் தனம் கதாபாத்திரம் மாற்றப்பட கூடாது என ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here