மீண்டும் அச்சுறுத்தும் மிக்ஜாம் புயல் – மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை!

0
மீண்டும் அச்சுறுத்தும் மிக்ஜாம் புயல் - மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை!
மீண்டும் அச்சுறுத்தும் மிக்ஜாம் புயல் - மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை!
மீண்டும் அச்சுறுத்தும் மிக்ஜாம் புயல் – மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தை அச்சுறுத்திய மிக்ஜாம் புயல் தற்போது தெலுங்கானாவில் மையம் கொண்டிருப்பதால் மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அரசு எச்சரிக்கை

தமிழகத்தில் தனது வீரியத்தை காட்டிய, மிக்ஜாம் புயல் தற்போது தெலுங்கானாவில் மையம் கொண்டுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் ராகுல் போஜ்ஜா தொலைதொடர்பு ஆலோசனை நடத்தினார். பின் பேசிய அவர் டிசம்பர் 5 மற்றும் டிசம்பர் 6 ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ரயிலில் உங்கள் சீட் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதா? இப்படி புகாரளியுங்க!! ரயில்வேயின் சூப்பர் திட்டம்!!

அதனால் மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும் எனவும், நிர்ணயிக்கப்பட்ட நெறிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே தண்ணீர் நிரம்பியுள்ள தண்ணீர் தொட்டிகளில் உடைப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர்களிடம் உயர் அதிகாரி வலியுறுத்தி இருக்கிறார். தாழ்வான பகுதிகள் மற்றும் தரைப்பாலங்களில் அதிக அளவு தண்ணீர் வர வாய்ப்புள்ளதால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!