தமிழகத்தில் தேயிலை விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் – அரசிடம் கோரிக்கை!
தமிழகத்தில் நீலகிரி மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஆதார விலை தேயிலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
ஆதார விலை:
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் விளைச்சல் செய்யப்படும் தேயிலை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இந்நிலையில் அங்குள்ள விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பசுந்தேயிலைக்கான குறைந்தபட்ச ஆதார விலை தேயிலை விவசாயிகளுக்கு கிடைக்கவும், மத்திய அரசிடமிருந்து மானியத்தை பெற்றுத்தரவும் முதல்வர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அரசு போட்டி தேர்வுகள் தான் உங்கள் இலக்கா? – உங்களுக்காக சிறந்த பயிற்சி வகுப்புகள்!
இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், நெல், கரும்பு போன்றவற்றிற்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படுவது போல தேயிலை, எண்ணெய் வித்துகள் போன்ற தோட்டக்கலை விளைபொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேளாண் மேம்பாட்டுக் குழு அமைக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதை உடனே நிறைவேற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.