தமிழகத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க கட்டுப்பாடு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று வழிபாடு செய்த சிலைகளை கரைப்பது குறித்த தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அரசு வெளியீடு
தமிழக மக்களால் கொண்டாடப்பட்ட முக்கிய பண்டிகையாக விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு செப் 18 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை வர இருக்கிறது. வழக்கமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு மூன்று நாட்கள் வழிபாடு செய்யப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும். இந்நிலையில் விநாயகர் சிலைகளை கரைப்பது குறித்து தமிழக அரசு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தேயிலை விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் – அரசிடம் கோரிக்கை!
அதாவது, சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்களால் செய்யப்பட்டதாக விநாயகர் சிலை இருக்க வேண்டும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், தெர்மாக்கோல் போன்றவை சிலைகளில் இருக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டம் ஒழுங்கு ஏற்படாத வகையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தி கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.