பொதுமக்கள் கவனத்திற்கு.. தமிழ்நாடு முழுவதும் சிலிண்டர் விநியோகம் ரத்து.. காரணம் என்ன தெரியுமா..??
தென்னிந்திய மாநிலங்களில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்களின் போக்குவரத்து வசதிகளுக்காக சுமார் 4,000 லாரிகள் துறைமுகங்களில் இருந்து எரிவாயுவை கொண்டு செல்கின்றன. இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் 2025-30 ஆம் ஆண்டிற்கான புதிய ஒப்பந்த விதிமுறைகளை சமீபத்தில் அறிவித்தது. அவை, இரண்டு அச்சு லாரிகளை பயன்பாட்டை தடை செய்து மூன்று அச்சு லாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவது போன்ற பல்வேறு கடும் நடவடிக்கைகளை கொண்டுள்ளதாக தெற்கு பிராந்திய பல்க் எல்பிஜி டேங்கர் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும், “புதிய ஒப்பந்த விதிமுறைகளை மாற்ற கூறி எண்ணெய் நிறுவனங்களுடன் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து நேற்று (27-03-2025) முதல் தெற்கு பிராந்தியத்தில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்க முடிவு செய்துள்ளோம் என்று கூறினார். இந்த நடவடிக்கை தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் LPG சிலிண்டர்கள் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என தெரிவித்தார். இதனால் 5 மாநிலங்கள் முழுவதும் வீட்டு மற்றும் வணிக LPG சிலிண்டர்கள் விநியோகம் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது”.


























