தமிழக பள்ளிகளில் மேலும் 2 ஆசிரியைகளுக்கு கொரோனா உறுதி – மாணவர்கள் அச்சம்!!
தஞ்சாவூர் மாவட்டத்தில் மேலும் ஒரு பள்ளியில் 2 ஆசிரியைகள் மற்றும் மாணவி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகளில் கொரோனா தாக்கம்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. அதன் காரணமாக தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடு விதிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
TN Job “FB
Group” Join Now
இந்நிலையில் ஏற்கனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கொரோனா தாக்கம் காரணமாக 57 மாணவிகளுக்கும் ஆசிரியை இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசு & கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
இதனை தொடர்ந்து நான்காவதாக ஒரு பள்ளியில் 2 ஆசிரியர்கள் மற்றும் மாணவி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக பள்ளி மாணவர்களின் நலன் கருதி அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.