டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம்- தமிழகத்திற்கு மத்திய அரசு விருது!!

0
டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம்- தமிழகத்திற்கு மத்திய அரசு விருது!!
டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம்- தமிழகத்திற்கு மத்திய அரசு விருது!!
டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம்- தமிழகத்திற்கு டிஜிட்டல் இந்தியா 2020 விருது

டிஜிட்டல் இந்தியா 2020 தங்க விருது, டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம் என்ற பிரிவில் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இணைய வழியாக வழங்கினார்.

டிஜிட்டல் இந்தியா 2020:

சுகாதாரம், தொழிலாளர், நிதி, சமூக நீதி மற்றும் சுற்றுசூழல் போன்ற துறைகளில் டிஜிட்டல் முறைகளை பின்பற்றி வளர்ச்சி அடையும் நோக்கில் செயல்படும் மாநிலங்களுக்கு டிஜிட்டல் இந்தியா விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான டிஜிட்டல் இந்தியா விருதுகள் 2020 நேற்று (டிசம்பர் 30) அன்று வழங்கப்பட்டது. புதுமையான டிஜிட்டல் முறைகளை பயன்படுத்தி அனைத்து அரசு நிறுவனங்களிலும் செயல்படும் செயலை ஊக்குவிப்பதற்காக டிஜிட்டல் இந்தியா விருதுகள் இந்திய தேசிய இணையதளத்தில் நிறுவப்பட்டுள்ளன.

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு கால ஊதியம் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உத்தரவு!!

இந்த விருதுக்கு பரிசீலிக்கப்பட்டும் மாநிலங்கள் நம்பிக்கை இணையம், இயந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவு, பல்பொருள் இணையம், இயற்கை மொழி செயலாக்கம், குரல் பயனர் இடைமுகம், பெரிய தரவு மற்றும் பகுப்பாய்வு, மெய்நிகர் உண்மை போன்ற செயல்முறைகளில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை வைத்து மதிப்பீடு செய்யப்படுகின்றனர்.

இஸ்ரோ தலைவர் கே.சிவன் பதவிக்காலம் நீட்டிப்பு – மத்திய அரசு உத்தரவு!!

இந்த ஆண்டுக்கான டிஜிட்டல் இந்தியா 2020 விருதுக்கான நிகழ்ச்சி நேற்று இணைய வழியாக நடைபெற்றது. இந்த விழாவில், மத்திய தகவல் தொழிநுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தகவல் தொழிநுட்ப துறை செயலர் அஜய் பிரகாஷ் ஷானே, தேசிய தகவலியல் மைய தலைமை இயக்குனர் நீட்டா வர்மா, தமிழக தகவல் தொழிநுட்ப துறை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, தமிழ்நாடு தேசிய தகவலியல் மைய தொல்நுட்ப இயக்குனர்கள் எம்.பாலசுப்பிரமணியன், ஜே.அருண்குமார், டி.ஈஸ்வரன் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் டிஜிட்டல் இந்தியா விருது 2020 தமிழகத்திற்கு வழங்கப்பட்டது. இதனை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

Velaivaippu Seithigal 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!