இஸ்ரோ தலைவர் கே.சிவன் பதவிக்காலம் நீட்டிப்பு – மத்திய அரசு உத்தரவு!!

0
இஸ்ரோ தலைவர் கே.சிவன் பதவிக்காலம் நீட்டிப்பு-மத்திய அரசு உத்தரவு!!
இஸ்ரோ தலைவர் கே.சிவன் பதவிக்காலம் நீட்டிப்பு-மத்திய அரசு உத்தரவு!!
இஸ்ரோ தலைவர் கே.சிவன் பதவிக்காலம் நீட்டிப்பு-மத்திய அரசு உத்தரவு!!

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தலைவரான தமிழகத்தை சேர்ந்த கே.சிவன் அவர்களின் பதவிக்காலம் இந்த ஆண்டோடு முடிவடையும் நிலையில் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்:

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சரக்கல்விளை கிராமத்தில் பிறந்த கே.சிவன் கடந்த 1982-ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சேர்ந்தார். ஏஎஸ் கிரண் குமார் ஓய்வு பெற்றதை அடுத்து சிவன் அந்த பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளார். சிவன் ஐம்பதாண்டு பழமையான இஸ்ரோ நிறுவனத்தின் ஒன்பதாவது தலைவராவார். 38 வருடங்களாக பணியாற்றி வரும் அவர் பல சாதனைகளை புரிந்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக விண்ணில் ஏவப்பட்ட ஏவுகணைகளில் இவரின் பங்கு அதிகமாக உள்ளது. இஸ்ரோவில் பிஎஸ்எல்வி திட்டத்தில் பங்கு வகித்தார். இதில் திட்டமிடல், வடிவமைப்பு, ஒருங்கிணைத்தல், ஆய்வு ஆகியவற்றில் பங்களித்தார்.

சித்தா போன்ற பாரம்பரிய மருத்துவ படிப்புகள் – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!

இந்தியாவில் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உலக சாதனை படைத்தது. இந்த சாதனையில் சிவனின் பங்கு மிக முக்கியமாகும். கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் நாள் இஸ்ரோவின் தலைவரான சிவனின் பதவிக்காலம் வருகிற ஜனவரி 14 உடன் முடிவடைகிறது. எனவே மத்திய அரசு அவரது பதவிக் காலத்தை மேலும் ஓராண்டு நீட்டித்துள்ளது. இதன்படி ஜனவரி 14-ஆம் தேதி 2022 வரை சிவன் இஸ்ரோ தலைவராக பதவி வகிப்பார்.

பூஜ்ய கல்வியாண்டால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் – ஆசிரியர் சங்கம் தகவல்!!

தற்போது சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் ஏவியது, குலசேர்ப்பட்டினத்தில் ஏவுதளம் புதிதாக அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மேலும் சிறிய செயற்கைகோள்களை விண்ணில் அனுப்ப எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டுகள் தயாரிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. அதனால் இந்த பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!