பூஜ்ய கல்வியாண்டால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் – ஆசிரியர் சங்கம் தகவல்!!

1
பூஜ்ய கல்வியாண்டால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் - ஆசிரியர் சங்கம் தகவல்!!
பூஜ்ய கல்வியாண்டால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் - ஆசிரியர் சங்கம் தகவல்!!
பூஜ்ய கல்வியாண்டால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் – ஆசிரியர் சங்கம் தகவல்!!

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. நடப்பு கல்வியாண்டு தொடங்கி 7 மாத காலங்கள் முடிவடைந்த நிலையில் இன்னும் கல்வியாண்டு முடிய 4 மாதங்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் தமிழ்நாடு கல்வித்துறை சார்பாக இந்த ஆண்டை பூஜ்ய ஆண்டாக அறிவிக்க ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியானது. கல்வி ஆண்டு முடிய 4 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் பூஜ்ய ஆண்டாக அறிவித்தால் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும் என்று ஆசிரியர்கள் சங்கம் சார்பாக தெரிவித்துள்ளனர்.

பூஜ்ய ஆண்டு:

கொரோனா நோய் அச்சம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. பள்ளிகள் திறப்பதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லாத காரணத்தால் அது குறித்த முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்த ஆண்டை பூஜ்ய ஆண்டாக அறிவிப்பது குறித்து முதல்வரிடம் ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிவித்தார் .

தமிழக அரசின் ரூ.2500 பொங்கல் பரிசுடன் நெய் விநியோகம் – ஆவின் நிர்வாகம்!!

பூஜ்ய கல்வியாண்டு என்பது அந்த ஆண்டை கணக்கில் எடுக்காமல் மாணவர்கள் இந்த ஆண்டு படித்த பாடத்தை மீண்டும் படிக்க வேண்டும். எனவே தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொது செயலாளர் ஏ.சங்கர் வெளியிட்ட அறிவிப்பில், “இந்த ஆண்டை பூஜ்ய கல்வி ஆண்டாக அறிவித்தால் உயர் கல்விக்கு செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இன்னும் நடப்பு கல்வி ஆண்டு முடிய 4 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்த திட்டத்தை அறிவித்தால் மாணவர்களுக்கு ஒரு ஆண்டே வீணாகி விடும். மாணவர்களுக்கு மன உளைச்சல், வேலைவாய்ப்பு, உயர் படிப்பில் ஓராண்டு பின்னடைவு போன்றவை ஏற்படுவதால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும். மேலும் சுகாதாரத்துறை அறிவுரைப்படி ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பாடம் எடுக்க தயார் நிலையில் உள்ளனர்” என தெரிவித்தார்.

சர்வதேச விமான போக்குவரத்துக்கு ஜன.,31 வரை தடை நீட்டிப்பு – மத்திய அரசு உத்தரவு!!

மேலும் அவர் சிவகங்கை கலெக்டர், மாணவர்களின் குடியிருப்புகளுக்கே பாடம் எடுக்க ஆசிரியர்களை செல்லுமாறு கூறுவது மாணவர்களின் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தும். மாணவர்கள் சிவகங்கை உட்பட பல மாவட்டங்களில் பள்ளிக்கு 10 கி.மீ., துாரத்தில் இருந்து வருகின்றனர் அவர்களுக்கு ஆசிரியர்கள் எப்படி ஒவ்வொரு குடியிருப்புகளுக்கு சென்று பாடம் எடுக்க முடியும்? என்ற கேள்வியை முன் வைத்தனர். எனவே தமிழக அரசு சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

1 COMMENT

  1. Make sure when lkg; ukg and other grade will open. Give strong comment because it’s very tough to survive financially but school management taking advantage specially cbse schools are worst.. they don’t bother about others family condition. If we send our childrens to school make sure if any thing happen to child your are the responsibility make the bond then we will send to school. Especially for lkg and ukg students. Why because I had that experience how my 4 years son fight with Covid19 condition and whole family was affected. So; government make smart moves before think..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!