சர்வதேச விமான போக்குவரத்துக்கு ஜன.,31 வரை தடை நீட்டிப்பு – மத்திய அரசு உத்தரவு!!

0
சர்வதேச விமான போக்குவரத்துக்கு ஜன.31 வரை தடை நீட்டிப்பு - மத்திய அரசு உத்தரவு!!
சர்வதேச விமான போக்குவரத்துக்கு ஜன.31 வரை தடை நீட்டிப்பு - மத்திய அரசு உத்தரவு!!
சர்வதேச விமான போக்குவரத்துக்கு ஜன.31 வரை தடை நீட்டிப்பு – மத்திய அரசு உத்தரவு!!

பிரிட்டனில் உருவாகியுள்ள உருமாறிய கொரோனா காரணமாக இந்தியா – இங்கிலாந்து இடையேயான விமான சேவை வருகிற ஜனவரி 7-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உத்தரவிடப்பட்டது. தற்போது சர்வதேச விமான சேவைக்கான தடையை ஜனவரி 31, 2021 வரை நீடிப்பதாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது.

சர்வதேச விமானங்கள் ரத்து:

கடந்த சில வாரங்களாக இங்கிலாந்திலிருந்து இந்தியாவில் நுழைந்த ஆயிரக்கணக்கான மக்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் தொடங்கியுள்ளது. புதிய உருமாறிய கோவிட் -19 காரணமாக 25-க்கும் மேற்பட்ட நாடுகள் ஐக்கிய நாடுகளுடன் விமான சேவையை நிறுத்தி வைத்துள்ளன.

ஆவின் மூத்த தொழிற்சாலை உதவியாளர் தேர்வு விடைக்குறிப்பு – உயர்நீதிமன்றம் ஆணை!!

கடந்த 14 நாட்களில் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த பயணிகள் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது, அதில் நேர்மறை முடிவுகள் வந்த பயணிகளுக்கு உருமாறிய கொரோனா உள்ளதா? என்று பரிசோதனை செய்யப்படுகிறது. தற்போது பிரிட்டனில் பரவி வரும் உருமாறிய கொரோனா தாக்கம் இந்தியாவில் பரவாமல் இருக்க மத்திய அரசின் தடுப்பு நடவடிக்கைகளில் முதலில் இந்தியா- இங்கிலாந்து இடையேயான சர்வதேச விமான சேவை ஜனவரி 7 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்குமாறு மத்திய சுகாதார அமைச்சகம் டிசம்பர் 30ம் தேதி சிவில் விமான அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்தது.

பொங்கல் பரிசு 25% கூடுதலாக வழங்க மாற்றுத்திறனாளிகள் மனு – தமிழக அரசு விளக்கம்!!

தற்போது சர்வதேச விமானங்களுக்கான தடை உத்தரவு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் சரக்கு விமானங்கள் தொடர்ந்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!