தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு கால ஊதியம் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உத்தரவு!!

0
தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு கால ஊதியம் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உத்தரவு!!!
தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு கால ஊதியம் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உத்தரவு!!!
தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு கால ஊதியம் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உத்தரவு!!!

தமிழகத்தில் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான விடுதிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சிறப்பு காலமுறை ஊதியம்:

சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் 1099 பள்ளி விடுதிகளும், 255 கல்லூரி விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன. அதில் 100 மாணவர்களுக்கு மேல் தங்கி படிக்கின்றனர். அதில் 100-க்கு மேல் மாணவர்கள் உள்ள 66 விடுதிகளில் முழுநேர துப்புரவு பணியாளர்கள் சிறப்பு கால ஊதியத்திலும், 100-க்கு கீழ் உள்ள மாணவர் விடுதிகளில் பகுதி நேர பணியாளர்கள் ரூபாய் 2000 தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இஸ்ரோ தலைவர் கே.சிவன் பதவிக்காலம் நீட்டிப்பு – மத்திய அரசு உத்தரவு!!

இவர்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ரூபாய் 3000 ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் பகுதி நேர வேலையாக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு நாள் முழுவதும் பணி இருந்து கொண்டே உள்ளது. எனவே இவர்கள் வேறு எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் குறைந்த ஊதியம் காரணமாக அவர்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

சித்தா போன்ற பாரம்பரிய மருத்துவ படிப்புகள் – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!

எனவே அதனை கருத்தில் கொண்டு தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், “மாநிலம் முழுவதும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் நலத்துறை விடுதிகளில் பகுதிநேரமாக பணியாற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு கால ஊதியம் வழங்கப்படும். அதன்படி 517 தூய்மை பணியாளர்களுக்கு ரூபாய் 4100 – 12,500 வரை ஊதியம் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

Velaivaippu Seithigal 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!