10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு எப்போது?? அமைச்சர் முக்கிய அறிவிப்பு!!

0
10 &12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு எப்போது?? அமைச்சர் முக்கிய அறிவிப்பு!!
10 &12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு எப்போது?? அமைச்சர் முக்கிய அறிவிப்பு!!
10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு எப்போது?? அமைச்சர் முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதி முதல் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வெளியிட்டு உள்ளார்.

பொதுத்தேர்வு அட்டவணை:

கொரோனா தொற்று அச்சத்தால் தமிழகத்தில் இதுவரை பள்ளிகள் திறப்பு குறித்து அரசு எவ்வித உறுதியான முடிவும் எடுக்கவில்லை. பிற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அவசரமாக மீண்டும் மூடப்பட்டது. ஆனால் தமிழகத்தில் இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது. இருப்பினும் தேர்வுகள் ஆன்லைன் வாயிலாகவே நடைபெற உள்ளது. இந்த கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

இஸ்ரோ தலைவர் கே.சிவன் பதவிக்காலம் நீட்டிப்பு – மத்திய அரசு உத்தரவு!!

இருப்பினும் எந்தெந்த வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு நடத்துவது மற்றும் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் குறித்து முதல்வருடன் ஆலோசித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறி இருந்தார். அதுமட்டுமின்றி பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் தமிழக அரசு சார்பில் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

ஜனவரி 1 முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு ரத்து – மாநில அரசு அறிவிப்பு!!

இன்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது மலைப்பகுதியில் தடை நீக்கப்பட்டு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி வெளியான பிறகே பொதுத்தேர்வுகள் அட்டவணை வெளியிடப்படும் என உறுதிபட கூறி உள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!