தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

0
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலைதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!! அறிக்கை!!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் அறிக்கை:

தமிழகத்தில் கோடை மழை பரவலாக பல இடங்களில் பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் கோடை வெயில் தாக்கத்தில் இருந்து சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் (1.5 கிலோமீட்டர் உயரத்தில்) வளிமண்டல சுழற்சி காரணமாகவும் மற்றும் விதர்பா (மகாராஷ்டிரா) முதல் தென் தமிழகம் வரை நிலவும் (1.0 கிலோமீட்டர் உயரத்தில்) வளிமண்டல சுழற்சி காரணமாகவும் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

29.04.2021:

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மதுரை, கரூர், சேலம், நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மாற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

30.04.2021 முதல் 02.05.2021 வரை:

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

தமிழகத்தில் மே 3 வரை முழு ஊரடங்கு? இன்று முக்கிய முடிவு!!

03.05.2021:

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

வெப்பநிலை முன்னறிவிப்பு:

தமிழக உள் மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக நிலவிய அதிகபட்ச வெப்பநிலை அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு இயல்பைவிட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். இதன் காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்.

மே 15 வரை பள்ளி, கல்லூரிகள் மூடல் – மாநில அரசு உத்தரவு!!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும். காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதன் காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!