
தமிழகத்தில் CNG மூலம் பேருந்துகளை இயக்க திட்டம்…!! எரிபொருள் தட்டுப்பாட்டை குறைக்க அரசு எடுத்த அதிரடி முடிவு
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பாக ஆயிரக்கணக்கான டீசல் பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த அரசு பேருந்துகளின் இயக்கம் உள்ளூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலம் என தமிழகம் முழுவதையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்நிலையில், தற்போது டீசல் பேருந்துகளை CNG எரிவாயு மூலம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கார் தொழிற்சாலை அமைக்கும் டெஸ்லா.. எந்தெந்த மாநிலங்களில் ஆலை அமையப்போகிறது தெரியுமா..?
அதாவது, தமிழக பேருந்துகள் முழுவதும் டீசல் மூலம் இயங்கி வருவதால், எரிபொருள் தட்டுப்பாட்டை குறைக்க இதுபோன்ற முடிவை எடுத்துள்ளதாக அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும், இதற்கு முதற்கட்டமாக தமிழ்நாட்டில் 1,000 அரசு பேருந்துகளை CNG எரிவாயு மூலம் இயக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, 8 லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்த அரசு பேருந்துகள் அல்லது 6 -7 ஆண்டுகளில் புதிதாக இயக்கப்பட்ட பேருந்துகளை தேர்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், இதற்காக தமிழ்நாடு அரசு ரூ. 70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
























