
புதிய பயனாளர்களுக்கான மகளிர் உரிமை தொகை குறித்த அப்டேட்…!! துணை முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..
தமிழ்நாடு அரசு பெண்கள் பொருளாதார ரீதியாக யாரையும் சார்ந்து இருக்க கூடாது என்னும் நோக்கில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதாவது, இத்திட்டத்தின் கீழ் தகுதியான மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1,000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மேலும், இத்திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் மீண்டும் விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டு, லட்சக்கணக்கான பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் நேற்று (02.03.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, “அடுத்த இரண்டு மாதங்களுக்குள் புதிய பயனாளர்களுக்கு மகளிர் உரிமை தொகை ரூ. 1,000 வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், இதுவரை கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 1 கோடியே 15 லட்சம் பேர் பயனாளர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
























