இந்தியாவில் கார் தொழிற்சாலை அமைக்கும் டெஸ்லா.. எந்தெந்த மாநிலங்களில் ஆலை அமையப்போகிறது தெரியுமா..?
பிரதமர் மோடி அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது டெஸ்லா நிறுவனத்தின் CEO எலான் மஸ்கை சந்தித்தார். இந்த சந்திப்பில் இந்தியாவிற்கு ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் பிராட்பேண்டு சேவைகள் வழங்குவது மற்றும் டெஸ்லா கார் வணிகம் பற்றி பேச்சுவார்த்தை நடந்தாக கூறப்பட்டது. அதன் பிறகு டெஸ்லா நிறுவனமானது மும்பை புறநகரில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் இந்தியாவில் பிரபல மாநிலத்தில் டெஸ்லா கார் தொழிற்சாலை அமைக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, உலகின் பல்வேறு நாடுகளில் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் கொடிக்கட்டி பறக்கும் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், தனது தொழிற்சாலையை தமிழ்நாட்டில் அமைக்க இடம் தேடி வருவதாக கூறப்படுகிறது. மேலும், மின்சார கார் தயாரிக்க தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ளதால் தமிழகத்தில் டெஸ்லா ஆலை அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், தமிழ்நாட்டை போல ஆந்திரா , குஜராத் மற்றும் மும்பை போன்ற மாநிலங்களிலும் ஆலை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.



























