தமிழகத்தில் கல்விக்கடன் ரத்து?? அமைச்சர் செங்கோட்டையன் பதில்!!!

0
தமிழகத்தில் கல்விக்கடன் ரத்து?? அமைச்சர் செங்கோட்டையன் பதில்!!!
தமிழகத்தில் கல்விக்கடன் ரத்து?? அமைச்சர் செங்கோட்டையன் பதில்!!!
தமிழகத்தில் கல்விக்கடன் ரத்து?? அமைச்சர் செங்கோட்டையன் பதில்!!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கல்விக்கடன் ரத்து செய்வது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குள்ளம்பாளையம் மற்றும் வேளண்மை கூட்டுறவு விற்பனை சங்கம் உட்பட 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் பொங்கல் பரிசு வழங்கும் விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். அதில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கேள்விக்கு விடை அளித்தார்.

அப்போது பள்ளிகள் திறப்பது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்து கேட்பு இன்று முதல் இந்த வார இறுதிவரை நடக்க உள்ளது. அதன்பின் பள்ளிகள் திறப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகள் திறந்ததும் மாணவர்களுக்கு இலவச டேப் வழங்க அரசு சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும். பொதுத்தேர்வு குறித்து அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.

ரேஷன் கடைகளுக்கான 2021ஆம் ஆண்டு விடுமுறை நாட்கள் – தமிழக அரசு அறிவிப்பு!!

மேலும் ஜாக்டோ – ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதிலளித்த அவர் “அனைத்து துறை அலுவலர்களின் கருத்துக்கள் அனைத்தும் முதல்வருக்கு தெரிவிக்கப்படும் அதை ஆராய்ந்து முதல்வர் முடிவெடுப்பார்” என கூறினார். பிறகு 20% அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாதது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதில், “மாணவர்கள் அதிகமாக இருந்ததால் மட்டுமே பற்றாக்குறை ஏற்பட்டது தற்போது குறைந்த மாணவர்கள் பயன்படுத்தவே ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன” என பதில் அளித்தார்.

பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு ஒத்திவைப்பு – இலங்கை அரசு அறிவிப்பு!!

தொடர்ந்து, மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு தேர்தல் வருகின்ற போது தான் தெரியும். பொங்கல் பண்டிகைக்கு ஆன்லைன் வகுப்பு விடுமுறை குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும்,” என்று தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!