ரேஷன் கடைகளுக்கான 2021ஆம் ஆண்டு விடுமுறை நாட்கள் – தமிழக அரசு அறிவிப்பு!!

0
ரேஷன் கடைகளுக்கான 2021ஆம் ஆண்டு விடுமுறை நாட்கள் - தமிழக அரசு அறிவிப்பு!!
ரேஷன் கடைகளுக்கான 2021ஆம் ஆண்டு விடுமுறை நாட்கள் - தமிழக அரசு அறிவிப்பு!!
ரேஷன் கடைகளுக்கான 2021ஆம் ஆண்டு விடுமுறை நாட்கள் – தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த வருடம் 11 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதுதவிர வார வெள்ளிக்கிழமை நாட்களும் உள்ளன. விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு மக்கள் ரேஷன் பொருள்களை வாங்க செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரேஷன் கடை விடுமுறை:

இந்தியாவில் மொத்தம் 4.99 லட்சம் நியாய விலைக் கடைகள் உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 33 ஆயிரத்து 222 கடைகள் உள்ளன. தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்ற சில அத்தியாவசியப் பொருட்களை அரசின் சலுகை விலையில் வழங்கப்படுகின்றன. தற்போது கொரோனா காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததால் பலர் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருள்களை நம்பியே உள்ளனர். தற்போது வரை தமிழகத்தில் உள்ள குடும்பங்களுக்கு 2,11,93,724 ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 6,82,12,884 பேர் பயனடைந்து உள்ளனர்.

பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு ஒத்திவைப்பு – இலங்கை அரசு அறிவிப்பு!!

ரேஷன் கடைகளில் தரப்படும் குடும்ப அட்டைகளில் உள்ள குறியீடுகளில் அர்த்தங்கள் பின்வருமாறு,
PHH – ரேஷன் கார்டில் PHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் அரிசி உட்பட அனைத்துப் பொருட்களை வாங்க முடியும். இந்த வகையில் மட்டும் 76,99,940 கார்டுகள் உள்ளன.
PHH – AAY: ரேஷன் கார்டில் PHH – AAY என்று குறிப்பிட்டு இருந்தால் 35 கிலோ அரிசி உட்பட அனைத்துப் பொருட்களையும் பெறலாம். இந்தக் கார்டை 18,64,600 குடும்பங்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
NPHH – உங்கள் ரேஷன் கார்டில் NPHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் அரிசி உட்பட அனைத்துப் பொருட்களை வாங்க முடியும். இந்த வகையில் மட்டும் 90,08,842 கார்டுகள் உள்ளன.
NPHH-S: ரேஷன் கார்டில் NPHH-S எனக் குறிப்பிட்டு இருந்தால் அரிசியை தவிர சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை மட்டும் வாங்கலாம். இந்த கார்டை 10,01,605 குடும்பங்கள் வைத்துள்ளனர்.
NPHH-NC: ரேஷன் கார்டில் இந்த குறியீடு இருந்தால் எந்த ஒரு பொருளும் கிடைக்காது. ஒரு அடையாள அல்லது முகவரிச் சான்றாக மட்டுமே பயன்படுத்த முடியும்.

இன்று முதல் கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

இவ்வாறு மக்களுக்கு பயன்பெறும் வகையில் உள்ள ரேஷன் கடைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு இந்த வருடத்தில் 11 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவை ஜனவரி 14, ஜனவரி 26, ஏப்ரல் 14, மே 1, மே 14, ஆகஸ்ட் 15, செப்டம்பர் 10, அக்டோபர் 2, அக்டோபர் 15, நவம்பர் 4, டிசம்பர் 25 ஆகியவை ஆகும். மேலும் அதில் வார விடுமுறை நாளான வெள்ளிக்கிழமையும் அமையும். இந்த விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்கலாம் என அரசு சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!