தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அதனால் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில் இன்று (அக்.16) ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்..!! ” இதோ உங்களுக்காக”..!!
மேலும் தற்போது வெளியான அறிவிப்பின் படி அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தென்காசி, விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதில் சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


























