தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அலர்ட்!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களில் நேற்று (அக்டோபர் 28) முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில் இன்றும் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதாவது விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவள்ளூர், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், திருப்பத்தூர், காஞ்சி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


























