தமிழகம் முழுவதும் ‘கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்’ நியமனம் – சிறப்பு டிஜிபி உத்தரவு!!

0
தமிழகம் முழுவதும் 'கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்' நியமனம் - சிறப்பு டிஜிபி உத்தரவு!!
தமிழகம் முழுவதும் 'கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்' நியமனம் - சிறப்பு டிஜிபி உத்தரவு!!
தமிழகம் முழுவதும் ‘கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்’ நியமனம் – சிறப்பு டிஜிபி உத்தரவு!!

தமிழகம் முழுவதும் கிராமங்களில் உள்ள குற்ற சம்பவங்களை தடுக்க ஒவ்வொரு தாய் கிராமத்திற்கும் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்களை நியமித்துள்ளதாக காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்:

தமிழகத்தில் அதிகப்படியான கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களில் உள்ள மக்கள் முன்னேறும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கிராமங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சியாக கருதப்படுகிறது. இந்தியாவின் முதுகெலும்பாக கிராமங்கள் உள்ளன. ஆனால் சில சிறிய கிராமங்களில் இன்னும் வளர்ச்சி அடையாமல் சாதி, மத மோதல்கள், ஆணவக்கொலை, தீண்டாமை போன்ற குற்ற சம்பவங்கள் இன்னும் நடைபெற்று கொண்டு தான் உள்ளது.

கல்லூரி மாணவர்களுக்கான கலை சொல்லாக்கத்திற்கான விருது- விண்ணப்பங்கள் வரவேற்பு!!

எனவே இந்த குற்ற சம்பவங்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு தாய் கிராமங்களிலும் தமிழக வருவாய்த்துறையில் கிராம நிர்வாக அலுவலர்கள் இருப்பது போல் காவல்துறையிலும் ஒவ்வொரு தாய் கிராமத்திற்கும் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்களை நியமிக்க வேண்டும் எனத் தமிழக டிஜிபி ராஜேஸ்தாஸ் உத்தரவிட்டுள்ளார்.

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச லேப்டாப் – 5.32 லட்சம் கொள்முதல்!!

இதுகுறித்து டி.ஜி.பி ராமதாஸ் கூறுகையில்,”கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் அடிக்கடி கிராமங்களுக்கு வந்து பொதுமக்களை சந்தித்து பேசுவர். அவர்களிடம் பொதுமக்கள் தங்கள் கிராமத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பான தகவல்களை தெரிவிக்கலாம். இதன் மூலம் குற்றங்கள் தடுக்கப்படும்”, இவ்வாறு அவர் கூறினார். இதன்படி சேலம் மாவட்டத்தில் 360 கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்களும், நாமக்கல் மாவட்டத்தில் 382 கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்களும், நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here