தமிழகத்தில் திடிரென உயர்ந்த சின்ன வெங்காயம் விலை – அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
தமிழகத்தில் சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்ததால், அதன் விலையானது அதிகரித்துள்ளது. அதன் படி ஒரு கிலோ வெங்காயம் ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெங்காயம் விலை
தமிழக மக்களின் சமையலில் வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் பொள்ளாச்சி மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் வரத்து குறைவாக இருக்கிறது. இந்த மார்க்கெட்டுக்கு பல மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்றவெளி மாநிலங்களில் இருந்தும் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. இந்த மார்க்கெட் மூலமாக சுற்றுவட்டார கிராம பகுதி சில்லறை, மொத்த வியாபாரிகள் மற்றும் கேரள வியாபாரிகள் அதிகம் பொருள்களை வாங்குகின்றனர்.
பெண் குழந்தைகளுக்கு ரூ. 1 லட்சம் – முதல்வர் அறிவிப்பு!
அந்த வகையில் கடந்த மாதம் சின்ன வெங்காயம் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அறுவடை இல்லாத காரணத்தால், அதன் வரத்து குறைந்துள்ளது. அதனால் அதன் விலையானது அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சின்ன வெங்காயம் கிலோ ரூ. 80 முதல் ரூ. 90 வரை விற்பனை செய்யப்பட்டது. சமையலுக்கு தேவையான முக்கிய பொருளாக வெங்காயம் இருப்பதால், அதன் விலை ஏற்றம் மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.