தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் – அரசு வெளியீடு!!

0
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் - அரசு வெளியீடு!!
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் - அரசு வெளியீடு!!
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் – அரசு வெளியீடு!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக நேற்று (ஏப்ரல் 20) முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் தொழிற்சாலைகளுக்கு தேவையான சில தளர்வுகள் குறித்து அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

தொழிற்சாலைகளுக்கான தளர்வுகள்:

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இரண்டாம் அலை தாக்கத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டை போல முழு ஊரடங்கு அறிவித்து மக்களின் பொருளாதாரம் பாதிக்காமல் இருக்க அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் நேற்று முதல் இரவு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் வார இறுதி நாளான ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் தொழிற்சாலைகளுக்கான கட்டுப்பாடுகள் குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:

தொலைத்தொடர்பு மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள்:

  • தகவல் தொடர்பு / தகவல் தொடர்பான சேவைகள் வழங்கும் நிறுவனங்களில் இரவு நேரம் பணியாற்றி வருவோர் அலுவலகத்தில் இருந்து செயல்படாமல் மருத்துவ நிதி, போக்குவரத்து மற்றும்‌ பிற முக்கியமான சேவைகளின்‌ பின்தள செயல்பாடுகளை ஆதரிக்க, தரவு மையங்கள்‌ மற்றும்‌ பிற முக்கியமான தகவல்‌ தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளின்‌ பராமரிப்பு மற்றும்‌ செயல்பாடுகள்‌.
  • பொருட்களை ஏற்றுதல்‌, இறக்குதல்‌ மற்றும்‌ சேமித்தல்‌ உள்ளிட்ட கிடங்கு நடவடிக்கைகள்‌.

7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!

  • விலக்கு அளிக்கப்படாத பிற தொழிற்சாலைகளை பொறுத்த வரையில் தீ, இயந்திர பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு நோக்கங்களுக்காக, தேவையான அத்தியாவசிய பராமரிப்பு ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும். மேலும் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளான மருந்துகள், மருந்துருவாக்கிகள், துப்புரவு பொருட்கள், ஆக்ஸிஜன், மருத்துவ சாதனங்கள், மருத்துவ ஜவுளி, அவற்றின் மூலப்பொருட்களுக்கான கூறுகள் மற்றும் அவற்றின் இடைநிலைகள் ஆகியவற்றுக்கான உற்பத்தி அலகுகள்.
  • கோழி, செல்லப்பிராணிகள் வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட உணவு தொடர்பான / உணவு பதப்படுத்தும் தொழில்கள்.

தமிழகத்தில் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பாடங்கள் – கல்வித்துறை ஏற்பாடு!!

  • உரங்கள், விவசாய இயந்திரங்கள் மற்றும் அவற்றின் கூறுகள் உள்ளிட்ட விவசாய உள்ளீடுகளின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள உற்பத்தி அலகுகள், அனைத்து ஏற்றுமதி தொழிற்சாலைகள்/நிறுவனங்கள், ஏற்றுமதி பொறுப்புறுதிகள் அல்லது ஏற்றுமதி ஆணைகள் கொண்ட தொழிற்சாலைகள் மற்றும் அத்தகைய தொழில்களுக்கு உள்ளீடுகளை உற்பத்தி செய்யும் துணை நிறுவனங்கள்.
  • பாதுகாப்புத் துறைக்கு உபகரணங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள்.
  • பாதுகாப்பு, வேளாண்மை மற்றும் சுகாதாரத் துறைகளில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் கூறுகளின் உற்பத்தி தொழிற்சாலைகள்.
  • மேலே உள்ள அனைத்து வகைகளுக்கும் பேக்கேஜிங் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள்.

சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!

தொடர் செயல்முறை தொழிற்சாலைகள்:

சுத்திகரிப்பு நிலையங்கள், பெரிய எஃகு ஆலைகள், பெரிய சிமெண்ட் ஆலைகள், வண்ணப்பூச்சுகள் உள்ளிட்ட தொடர் செயல்முறை வேதியியல் தொழிற்சாலைகள், சர்க்கரை ஆலைகள், உரங்கள், மிதவை கண்ணாடி ஆலைகள், தொடர் செயல்முறையுடன் கூடிய பெரிய வார்ப்பாலைகள், டயர் உற்பத்தி தொழிற்சாலைகள், பெரிய காகித ஆலைகள், மொபைல் போன்கள் மற்றும் நுகர்வோர் மின்னணு தயாரிப்புகள் உள்ளிட்ட மின்னணு தொழிற்சாலைகள்.

நாடு முழுவதும் முழு ஊரடங்கு தேவையில்லை – பிரதமர் மோடி உரை!!

பெரிய வார்ப்பாலைகள், பெயிண்ட் கடைகள் அல்லது பிற தொடர்ச்சியான செயல்முறைகளைக் கொண்ட ஆட்டோமொபைல் உற்பத்தி தொழிற்சாலைகள் தொடர்ச்சியான ஒருங்கிணைந்த பெரிய ஜவுளி தொழிற்சாலைகள் அனைத்து தொழில்களும் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை கடுமையாக பின்பற்றுமாறு வலியுறுத்தப்படும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!