தமிழகத்தில் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பாடங்கள் – கல்வித்துறை ஏற்பாடு!!
வீடியோ பாடங்கள்:
ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு அரசு பள்ளிகள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை நடத்தியது. இது போன்ற பேரிடர் காலங்களில் மாணவர்களின் கல்வி பாதிப்படையாமல் இருக்க கல்வி தொலைக்காட்சி மற்றும் ரேடியோ வழியாக பாடங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. தமிழக கல்வித்துறை மாவட்ட வாரியாக பாடங்களை பிரித்து கொடுத்து வீடியோ பாடங்களை தயாரிக்க உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் முழு ஊரடங்கு தேவையில்லை – பிரதமர் மோடி உரை!!
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் மாவட்ட ஆசிரியர்கள் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் வீடியோவை தயாரிக்கும் பணியை செய்து வருகின்றது. திருப்பூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் வீடியோ பாடங்களை தயாரிக்கும் பணியினை தொடங்கி உள்ளது.
தமிழகம் முழுவதும் தற்போது 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக வரும் கல்வி ஆண்டிலும் பள்ளிகள் திறக்க முடியாத சூழல் வந்தால் பாடங்களை ஆன்லைன் மூலம் வீடியோ வடிவில் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். தயாரிக்கப்பட்ட வீடியோக்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, கல்வி இணையதளம் மற்றும் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என்று மாவட்ட பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர் அறிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்