தமிழகத்தில் அரசு விடுதிகளில் சேர மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம் – ஜூலை 15 கடைசி நாள்!

0
தமிழகத்தில் அரசு விடுதிகளில் சேர மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம் - ஜூலை 15 கடைசி நாள்!
தமிழகத்தில் அரசு விடுதிகளில் சேர மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம் - ஜூலை 15 கடைசி நாள்!
தமிழகத்தில் அரசு விடுதிகளில் சேர மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம் – ஜூலை 15 கடைசி நாள்!

தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின மாணவர்கள் கல்லூரி விடுதி தங்கி படிக்க ஜூலை 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் வரவேற்பு:

தமிழகத்தில் பழைய கல்வியாண்டு முடிவடைந்து புது கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்த ஜோதி வெளியிட்ட அறிவிப்பின் படி தமிழக அரசால் சென்னை மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கான 17 விடுதிகள் இயங்கி வருகின்றன. அதில் 11 விடுதிகள் மாணவர்களுக்கும், 6 விடுதிகள் மாணவிகளுக்கும் இயங்கி வருகிறது. இந்த விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னீக் படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவ மாணவிகள் தங்கலாம்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் வேலை!

மேலும் இந்த விடுதிகளில் தங்குவோர் எந்தவித செலவினமும் இல்லாமல் சலுகைகளுடன் தங்கி படிக்கலாம். மேலும் அந்த மாணவ மாணவிகளுக்கு உணவு மற்றும் தங்கும் வசதி அளிக்கப்படும். இந்த விடுதியில் சேர பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000க்கு அதிகமாக இருக்க கூடாது. மேலும் படிக்கும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ மேல் இருக்க வேண்டும். மேலும் இது மாணவிகளுக்கு பொருந்தாது. இந்த விடுதிகளில் சேர தகுதியுடையவர்கள், விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

Follow our Instagram for more Latest Updates

மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஜூலை 15 ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் ஆண்டு வருமான சான்றிதழ் வழங்க வேண்டும். மேலும் தமிழகத்தில் உள்ள விடுதியில் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியாக 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!