விவசாயிகளுக்கு நற்செய்தி… கறவை மாடு வாங்க கடனுதவி வழங்கும் திட்டம்., தமிழக அரசு வெளியிஓர்ட்ட முக்கிய அறிவிப்பு…
தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த கறவை மாடு வளர்ப்பிற்கு மானிய விலையில் கடன் உதவி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) சார்பில், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு 2 கறவை மாடுகள் வாங்க ரூ. 1,20,000 கடன் உதவி வழங்கப்படவுள்ளது.
மேலும், இந்த கடனை திரும்ப செலுத்துவதற்கு 3 ஆண்டுகள் கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த கடன் தொகைக்கான வட்டி விகிதம் 7% எனவும், இதில் பயனாளிகளின் பங்கு 5% எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 18 முதல் 60 வயது வரை உள்ள ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக பெறுபவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

























