பெண் குழந்தைகளுக்கு ரூ. 50000 உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

1
பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம்- காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவிப்பு!!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம்- காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவிப்பு!!
பெண் குழந்தைகளுக்கு ரூ. 50000 உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

தமிழகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இரண்டு பெண்குழந்தைகள் வைத்துள்ளவர்கள், அந்த பெண்குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு சார்பில் இரண்டு குழந்தைகளுக்கும் தலா ரூபாய் 25000 என 50000 ரூபாய் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரைமுறைகள் பின்வருமாறு.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம்:

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கான முன்னேற்றத்திற்காக அரசு சார்பில் பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலையில் சமூக நலத்துறை மூலம் செயல்பட்டு வரும் தமிழக அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டில் 2 பெண்குழந்தைகள் வைத்துள்ள பெற்றோர்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க அரசு சார்பில் முதல் குழந்தைக்கு 25000 ரூபாய் என இரண்டாவது குழந்தைக்கும் 25000ரூபாயாக மொத்தம் 50000 ரூபாய் வழங்கப்படுகிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளில் வயது வரம்பு அதிகரிக்க வேண்டும்-தேர்வர்கள் கோரிக்கை!!

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்ட அறிவிப்பில்,” பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்திற்கு விண்ணப்பிக்க வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் சமூகநலத்துறை பணியாளர்களிடம் கீழே குறிப்பிட்டுள்ள ஆவணங்களை வழங்கி இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம்” என தெரிவித்துள்ளார்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள் பின்வருமாறு,

1. ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை மற்றும் உள்ள நிலையில் குழந்தை பிறந்து 3 வயதிற்குள் இந்த திட்டத்திற்கு பதிவு செய்ய வேண்டும்.

2.ஏற்கனவே முதல் பெண் குழந்தை பிறந்த நிலையில், இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கும் 3 வயதிற்குள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – இன்று முதல் கருத்துக்கேட்பு கூட்டம்!!

3. பெண் குழந்தைகளின் தாய்க்கு 35 வயதிற்கு மேல் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து இருக்க வேண்டும், அதற்கான மருத்துவ சான்றிதழ் விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

4. பெண் குழந்தைகள் வைத்திருக்கும் குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 72000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

5.திருவள்ளூர் மாவட்டத்தில் 10 ஆண்டுகளாக வசிக்க வேண்டும். பிறப்பிட சான்று,குழந்தைகளின் தாய் மற்றும் தந்தை வயது சான்று, குடும்ப அட்டை, குடும்ப புகைப்படம், திருமண சான்றிதழ், ஆண்டு வருமானம் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று, குழந்தைகளில் பிறப்பு சான்றிதழ் ஆகியவை சேமிப்பு பாத்திரம் பெறுவதற்கு தேவைப்படும் ஆவணங்கள் ஆகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here