கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு10.5% இடஒதுக்கீடு – தமிழக முதல்வர் அறிவிப்பு!!
தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்து அதனை நிறைவேற்றியுள்ளார்.
வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு:
தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும், குறிப்பாக வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு வழங்க தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டன. இந்நிலையில் சட்டப்பேரவை நடைபெற்று வரும் நிலையில் தமிழக முதல்வர் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.
TN Job “FB
Group” Join Now
தற்போது, தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க கோரிய மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த பிரிவிற்கு எம்பிசிவி என்றும் பிரித்து பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி தாக்கல் செய்த மசோதாவில் கூறியதாவது, “மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5% தனி ஒதுக்கீடு வழங்கப்படும்.
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மார்ச் 1 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
சீர்மரபினர்க்கு 7% இடஒதுக்கீடு வழங்கப்படும், மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் இதர பிரிவினருக்கு 2.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படும். மேலும் வன்னியர்களுக்கான ஒதுக்கீடு தற்காலிகமானது 6 மாதம் கழித்து சாதிகள் குறித்த விவரம் சேகரித்த பின் இவை மாற்றியமைக்கப்படும்.”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்