
வேலையில்லாதவரா நீங்கள்..? அப்போ உங்களுக்கு தான் இந்த மாதம் ரூ. 1000 உதவித்தொகை…!! முழுசா தெரிஞ்சுக்க இத படிங்க…
தற்போதைய காலக்கட்டத்தில் வேலையின்மை என்பது அதிகரித்துள்ளது. அதிலும் படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காததாலும் சரியான வருமானம் இல்லாததாலும் பல்வேறு இளைஞர்களும் மன உளைச்சலுக்கு உள்ளாகி மிகவும் அவதிப்படுகின்றனர். இவர்களின் இந்த வருமான கவலையை தீர்க்கும் விதமாக தமிழக அரசு “வேலையின்மை உதவித்தொகை” என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மாதந்தோறும் மாற்றுத்திறனாளிகளில் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு 600 ரூபாயும், பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு 750 ரூபாயும், பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு 1000 ரூபாயும் வழங்கி வருகிறது.
தமிழகத்தில் நாளை (13.05.2025) முழுநேர மின்தடை அறிவிப்பு..!! ஏரியாக்கள் லிஸ்ட் இதோ..!!
மேலும், இத்திட்டத்தின் கீழ் மற்றவர்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாயும், தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200 ரூபாயும், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 400 ரூபாயும், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு 600 ரூபாயும் நிதியுதவி வழங்கப்படுகிறது. மேலும், இத்திட்டத்தில் இணைய வேண்டும் எனில் விண்ணப்பதாரர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையத்தில் 5 ஆண்டுகள் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும், ஆண்டு வருமானம் ரூ 72,000-ஐ தாண்ட கூடாது என்றும் அரசு கூறுகிறது. மேலும், இத்திட்டத்தில் இணைய விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பித்து பயனடையலாம்.

























