தமிழகத்தில் சரிவை நோக்கி தங்கம் விலை.. சவரன் ரூ.240 குறைவு – இன்றைய நிலவரம்!

0
தமிழகத்தில் சரிவை நோக்கி தங்கம் விலை.. சவரன் ரூ.240 குறைவு - இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் சரிவை நோக்கி தங்கம் விலை.. சவரன் ரூ.240 குறைவு - இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் சரிவை நோக்கி தங்கம் விலை.. சவரன் ரூ.240 குறைவு – இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் தங்கம் விலையானது கடந்த 2 நாட்களாக குறைந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி தங்கம் விலை ஒரு கிராம் ரூ.30 குறைந்து ரூ.5,645க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை:

பணக்காரர்கள் முதல் சாமானிய மக்கள் வரை யாரும் தங்கம் என்றால் முதலீடு செய்ய தயங்க மாட்டார்கள். தங்கம் வாங்க சிறந்த நாள் இது தான் என சொல்ல முடியாது அந்த அளவிற்கு தங்கம் விலை நாளுக்கு நாள் மாறுபடுகிறது. கடந்த வாரம் உச்சம் பெற்ற தங்கம் விலை கடந்த 2 நாட்களாக குறைந்து வருகிறது. அதனால் நகை வாங்க நினைப்பவர்கள் நிம்மதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.30 குறைந்து ரூ. 5,645 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மாசாணியம்மன் திருக்கோயில் மருத்துவ மைய வேலைவாய்ப்பு 2023 – ரூ.60,000/- சம்பளம்!

அதே போல ஒரு சவரன் தங்கம் ரூ.240 குறைந்து ரூ. 45,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.6111க்கும் ஒரு சவரன் ரூ.48888க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அது மட்டுமில்லாமல் வெள்ளி விலை ஒரு கிராம் 60 காசுகள் குறைந்து ரூ. 78க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.78000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதனால் நகை வாங்க இதுவே சிறந்த நாள் என்பதால் நகைக்கடைகளுக்கு மக்கள் படையெடுக்க தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!