பாஜக 5 இடங்களில் முன்னிலை – தொண்டர்கள் உற்சாகம்!!
தமிழகத்தில் தற்போது சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போதைய நிலவரப்படி, பாஜக 5 இடங்களில் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
தமிழகத்தில் அதிமுக கட்சியின் ஆட்சி மே மாதத்துடன் முடிய இருந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் சுமூகமாக நடைபெற்றது. இந்த முறையும் ஆளும் கட்சியான அதிமுக தேசிய கட்சியான பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
திருவொற்றியூரில் நாம் தமிழர் சீமான் பின்னடைவு – திமுக முன்னிலை!!
பாஜ.,விற்கு மொத்தமாக 20 இடங்கள் ஒதுக்கப்பட்டது. தமிழக பாஜ தலைவர் முருகன் பிரச்சாரத்திலும், பரப்புரையிலும் ஈடுபட்டார். தற்போதைய நிலவரப்படி, பாஜக மொத்தமாக 5 இடங்களில் முன்னிலையில் இருக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
துறைமுகம், தாராபுரம், உதகமண்டலம், நாகர்கோவில், திருநெல்வேலி ஆகிய இந்த 5 இடங்களில் பாஜக முன்னிலையில் இருக்கின்றது. முன்னிலையில் இருக்கும் வேட்பாளர்களின் விவரம்,
- துறைமுகம் – வினோஜ் பி.செல்வம்
- தாராபுரம் – எல்.முருகன்
- நாகர்கோவில் – எம்.ஆர்.காந்தி
- திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன்
- உதகமண்டலம் – போஜராஜன்
Marvelous Modi Sir’s superb administration.