தமிழகத்தில் அதிகமாக பரவும் டெங்கு காய்ச்சல் – தடுப்பு நடவடிக்கைகள்! அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வரும் நிலையில், ஆலோசனை கூட முடிவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டெங்கு தடுப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
டெங்கு தடுப்பு:
தமிழகத்தில் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அதனால் டெங்கு கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற டெங்கு தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கலந்து கொண்டார். அப்போது அவர் மக்கள் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசினார்.
Join Our WhatsApp
Group” for Latest Updates
அதாவது கடந்த 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை டெங்குவால் 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் இனி மழைக்காலம் வருவதால் பொது இடங்கள், கட்டுமான பணியிடங்களில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கும், அனைத்து துறை செயலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் இன்று (செப்.16) 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!
மேலும் மக்கள் தங்களுடைய வீட்டை சுற்றி மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நல்ல தண்ணீர் இருக்கும் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் கொசுக்கள் அதிகமாக இருந்தால் அந்த இடங்களில் கொசு கொல்லி மருந்துகளை தெளிக்க வேண்டும். காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்தால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.