தமிழகத்தில் விரைவில் ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகைகள் – ஆவின் நிறுவனம் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் வரிசையாக பண்டிகை நாட்கள் வர இருப்பதால் ஆவின் இனிப்பு, கார வகைகளின் விற்பனையை 20% அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நிறுவன மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ஆவின் இனிப்புகள்:
தமிழகத்தில் அக்டோபர் மாதம் ஆயுத பூஜை மற்றும் நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை வர இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு காரவகைகளின் விற்பனையை 20 சதவீதம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குனர் சு.வினீத் தெரிவித்துள்ளார்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் ஆவின் நிறுவனம் மூலமாக பால் மட்டுமல்லாமல், பால் சார்ந்த பொருள்களான வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா மற்றும் இனிப்பு வகைகளும், கார வகைகள் என 225 பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது.
ரோகினி வாழ்க்கையில் என்ட்ரி கொடுத்த வில்லன்.. உண்மை வெளியே வருமா – “சிறகடிக்க ஆசை” சீரியல் அப்டேட்!
கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டது. அதன் மூலம் ரூ.116 கோடி லாபம் கிடைத்த நிலையில், அதனை மேலும் 20 சதவீதம் அதிகரிக்க திட்டமிட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.